2010-09-14 16:24:15

இந்தியாவில் கிறிஸ்தவ பள்ளியும் கோவிலும் தீவைத்துத் தாக்கப்பட்டுள்ளன


செப்டம்பர் 14, 2010. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ பாதிரி ஒருவர் எரித்தார் என்ற வதந்தியையொட்டி இந்தியாவில் கத்தோலிக்க பள்ளி ஒன்றும் கோவில் ஒன்றும் தீவைத்து தாக்கப்பட்டுள்ளன. இதையொட்டிய வன்முறைகளின்போது காவல்துறை சுட்டதில் 13பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாபில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலேர்கோட்லா பகுதியில் கோவில் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் திருச்சபையின் பள்ளி ஒன்றை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய தீவிரவாத குழு ஒன்று ஏனைய சில கட்டிடங்களையும் தாக்கியுள்ளது.

புனித நூலான குரானை எரிப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு சிறு கிறிஸ்தவக் குழுவின் தலைவர் டெரி ஜோன்ஸ் என்பவர் அச்சுறுத்தி வந்ததை இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள் பலமுறை வன்மையாக கண்டித்துள்ள போதிலும், வதந்தியை நம்பி, திருச்சபைக் கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளது கவலை தருவதாக உள்ளதாக தலத்திருச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.