2010-09-13 16:26:51

மூன்றாண்டு சீரமைப்புப் பணிகளுக்குப்பின் திறக்கப்பட உள்ளது வத்திக்கான் நூலகம்


செப்.13, 2010. கடந்த மூன்றாண்டுகளாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வத்திக்கானின் அப்போஸ்தலிக்க நூலகம், வரும் திங்கள் முதல், ஆய்வாளர்களுக்கெனத் திறக்கப்படும் என இத்திங்களன்று வத்திக்கானில் இடம்பெற்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுதவிர வத்திக்கான் நூலகம் குறித்த கண்காட்சி ஒன்று இவ்வாண்டு நவம்பர் 10ம் தேதி முதல் வரும் ஆண்டு ஜனவரி இறுதி வரை வத்திக்கானில் திறந்து வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1450ம் ஆண்டுகளில் திருத்தந்தை 5ம் நிக்கொலஸால் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகம் இன்று ஏறத்தாழ 65,000 கையெழுத்துப் பிரதிகளையும், உலகிலேயே மிகத்தொன்மையான விவிலியப்பிரதியையும் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.