2010-09-13 14:24:33

செப்டம்பர் 13 நாளும் ஒரு நல்லெண்ணம்


அண்மையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள சுஷ்ருதா மருத்துவமனையில் ஒரு புதுமையான அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள். 40 வயதான சண்முக கல்பர்ஜி என்பவருக்கு மூளையில் பேச்சை கட்டுப்படுத்தும் பகுதியில் கட்டி இருந்தது. அறுவைச் சிகிச்சை செய்த பிறகு அவருக்கு பேச்சு வரலாம், வராமலும் போகலாம் எனும் நிலை இருந்தது. இதனால் அந்த மருத்துவமனை டாக்டர்கள் ஒரு புதுமையான அறுவைச் சிகிச்சைக்கு கல்பர்ஜியை உட்படுத்தினர். அதாவது அறுவை சிகிச்சை நடந்த நேரம் முழுவதும் அவர் டாக்டர்களுடன் பேசிக்கொண்டே இருப்பது. விழிப்பு நிலையிலேயே அவருக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர் மருத்துவர்கள். இதுபற்றிப் பேசிய அந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மிதுன், ‘மூளையின் இடது பகுதியில் பேச்சை கட்டுபடுத்தும், புரிந்து கொள்ளும் முக்கிய பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் கட்டி இருந்ததால் அறுவைச் சிகிச்சையின் போது அவை பாதிக்கப்படும் நிலை இருந்தது. இதனால் விழிப்பு நிலையிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சையைச் செய்தோம் என்றார்.

ஜவஹர்லால் நேரு சொன்னார் - செயலுக்கு முன்னமே விளைவுகள் பற்றி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகு தூரம் என்று.








All the contents on this site are copyrighted ©.