2010-09-11 16:24:22

இந்தியக் கத்தோலிக்கப் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு உதவுமாறு ஆயர்கள் அழைப்பு


செப்.11,2010. இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்கு கல்வியை ஓர் ஆயுதமாகக் கையாள்வதற்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் எல்லாக் கத்தோலிக்கப் பள்ளிகளும் கல்லூரிகளும் ஏழைகளுக்கும் கடும் பொருளாதார நெருக்கடிகளில் வாழ் கின்றவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுள்ளது.

இவ்வறிக்கை குறித்துப் பேசிய இப்பணிக்குழுவின் செயலர் அருள்திரு Kuriala Chittattukalam, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கல்வி கற்க முடியாத நிலையில் இருக்கும் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய மாணவர்களை இனம் கண்டு அவர்கள் இலவசமாகப் படிப்பதற்கு வகை செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் உதவி தேவைப்படும் மாணவர்க்கென நிதி ஒதுக்கவும் இம்மாணவர்களை நடத்தும் விதம் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அக்குரு கூறினார்.







All the contents on this site are copyrighted ©.