2010-09-09 15:19:29

பிலிப்பின்ஸ் அரசு ஏழை மக்களுக்கு நிதி வழங்கும் திட்டத்திற்கு அருள் சகோதரிகள் கடும் எதிர்ப்பு


செப்.09, 2010 பிலிப்பின்ஸ் அரசு ஏழை மக்களுக்கு நிதி வழங்குவதாக அறிவித்துள்ள ஒரு திட்டத்திற்கு அந்நாட்டு அருள் சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
‘பிலிப்பின்ஸ் குடும்பங்களை முன்னேற்றும் திட்டம்’ என்ற பெயரில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 டாலர் மதிப்புள்ள 1400 pesoக்கள் வழங்கப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்துள்ளது, ஏழைகளை இன்னும் அதிகமாய் தர்மம் தேடுவோராய் மாற்றும் வழி என்று Mindanao பகுதி அருள்சகோதரிகள் சங்கம் (SAMIN) என்ற அமைப்பின் செயலர் அருள்சகோதரி Elsa Compuesto கூறினார்.
இத்திட்டத்தின் வழியாக, அடுத்த இரு ஆண்டுகளில் 40 லட்சம் மக்கள் பயனடைவர் என்று அரசு அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு இவ்வாறு தர்மம் செய்வதற்குப் பதில், அவர்களது வறுமைக்கான காரணங்களை அறிந்து, அவைகளைக் களைய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென அருள்சகோதரி Elsa Compuesto வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.