2010-09-09 14:38:44

செப்டம்பர் 10 நாளும் ஒரு நல்லெண்ணம்


மனிதன் சாதிக்கப் பிறந்தவன். சாதிக்க நினைப்பவனுக்கு எல்லாமே சாத்தியமாகின்றது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பூவை மீண்டும் பூக்கச் செய்து அதன் பெருமையை உலகுக்கு அறியச் செய்துள்ளார் இங்கிலாந்து விவசாயி ஒருவர். உலகில் மிகவும் அரியவகை மலர்களில் ஒன்றாகக் கருதப்படும் Franklinia alatamaha எனப்படும் பிராங்க்ளின் பூ 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பூத்துள்ளது. Cornwall பகுதியில் Truro வுக்கு அருகிலுள்ள Trewithen Estateல் ஒரு விவசாயி இதனைப் பயிரிட்டு வெற்றிகரமாக மீண்டும் மலர செய்துள்ளார். இம்மரம் குளிந்த வெப்பநிலையைத் தாங்கினாலும் இதற்கு வெதுவெதுப்பான வெப்பநிலை தேவைப்படுகிறது. பத்து மீட்டர் உயரம் வரை வளரும் என்றாலும் பொதுவாக 4.5 மீட்டர் முதல் 7.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக நறுமணம் கொண்ட இம்மலர் தேனீர் கப் போன்று வடிவில் அழகான வெள்ளை நிற இதழ்களைக் கொண்டது. இது தேயிலை தாவரஇனக் குடும்பத்தைச் சேர்ந்தது. 1800களிலிருந்து இது காடுகளில் அழிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. John, William Bartram ஆகிய இரு பிலடெல்பியத் தாவிரவியல் அறிஞர்கள 1765ம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்து அவர்களின் நெருங்கிய நண்பரான பெஞ்சமின் ப்ராங்கிளின் பெயரை இதற்குச் சூட்டியிருக்கிறார்கள். மிகுந்த நறுமணமிக்க இந்த மலர் பல்வேறு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மறைந்து போய் மீண்டும் மனிதனின் விடா முயற்சியால் மலர்ந்துள்ளது. இந்தச்செய்தி வெளியாகியிருந்த செப்டம்பர் 8, 2010 இப்புதன்கிழமைக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அந்நாளில் தேதி குறிப்பிட்டு எதிலும் எழுதிய போது 8.9.10 என எழுதினோம். இம்மாதிரி 8 9 10 என்ற வரிசை இனிமேல் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வரும் என்றும் அந்நாளில் சொல்லப்பட்டது.

இறந்தும் இறவாது வாழ சாதனை செய்வோம்.








All the contents on this site are copyrighted ©.