2010-09-07 15:44:55

அரசுகளின் புறக்கணிப்பால் 40 இலட்சம் சிறார் இறப்பு


செப்.07,2010. அரசுகள் ஏழைகளுக்கு உதவி செய்யத் தவறியதால் கடந்த பத்து ஆண்டுகளில் தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் நாற்பது இலட்சம் குழந்தைகள் இறந்துள்ளன என்று பிரிட்டனின் Save the Children என்ற குழந்தை நல அமைப்பு குறை கூறியது.

மேலும், ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பான யுனிசெப் வெளியிட்ட மற்றுமோர் அறிக்கையில் பணக்கார மற்றும் வறுமை நிறைந்த சூழல்களில் வாழும் சிறார்க்கிடையே பெரிய இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகள் குறித்த ஐ.நா. மாநாடு நியுயார்க்கில் நடக்க இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்ற இந்நேரத்தில் இவ்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.