2010-09-06 15:43:42

ஈரானில் கல்லால் எறிந்து கொல்லப்படத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த பெண்ணின் தீர்ப்பைத் தடை செய்ய திருப்பீடம் திட்டம்


செப்.06,2010. ஈரானில் கல்லால் எறிந்து கொல்லப்படத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் Sakineh Mohammdi Ashtiani என்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஈரான் அரசை விண்ணப்பிக்கத் திருப்பீடம் தனது அறநெறி சார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இது குறித்து இஞ்ஞாயிறன்று நிருபர்களிடம் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, மரண தண்டனையின் மிகக் கொடூரமான வடிவமாகத் தெரியும் கல்லால் எறிந்து கொல்லப்படும் தண்டனையை வன்மையாயக் கண்டிப்பதாகக் கூறினார்.
43 வயதான Sakineh என்ற இந்தத் தாய் குறித்த விவகாரத்தை மிகுந்த ஆர்வமுடன் திருப்பீடம் கவனித்து வருகின்றது என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.Sakineh என்ற ஈரானியப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டாள் எனறக் குற்றம் சாட்டின் பேரில் அவள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் ஈரானிய அதிகாரிகளோ, அந்தப் பெண் அவளது கணவனின் மரணம் தொடர்பான வழக்கின் பேரில் இவ்வாறு தீர்ப்பிடப்பட்டாள் என்று கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.