2010-09-06 15:44:40

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் குழந்தை பிறப்பின் போது 70 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர்


செப்.06,2010. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் குழந்தை பிறப்பின் போது 70 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர். இது உலகளவில் 3 கோடியே 42 இலட்சமாக உள்ளது என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் கூறப்பட்டது.
ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா, மெட்டர்னல் ஹெல்த் டாஸ்க் போர்ஸ் அட் என்ஜென்டர் ஹெல்த் ஆகிய அமைப்புகள் இணைந்து “தாய்மை நலவாழ்வு மாநாடு 2010“ என்ற தலைப்பில் சென்னையில் நடத்திய மூன்று நாள் மாநாட்டில் இவ்வாறு கூறப்பட்டது.
உலகளவில் குழந்தை பிறப்பின் போது ஆண்டுக்கு 3 கோடியே 42 லட்சம் பெண்கள் இறக்கின்றனர். இந்த இறப்பு எண்ணிக்கையில் 99 விழுக்காடு வளரும் நாடுகளில்தான் நடக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு 21 விழுக்காடாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் ஆண்டுக்கு 70 ஆயிரம் பெண்கள் வீதம் இறக்கின்றனர். ஆனால் இந்த இறப்பு விகிதத்தைத் தடுப்பதற்கானச் சாத்தியக் கூறுகள் உள்ளன என்றும் அம்மாநாட்டினர் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.