2010-09-04 14:41:56

தமிழகத்தில் புதுப்பித்தலில் புதிய தொழில்நுட்பம்


செப்.04,2010. உலகிலேயே முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1250 வருடங்கள் பழமையான ஆலயம் ஒன்று தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள தொன்மை வாய்ந்த கைலாசநாதர் ஆலயம் பெருமளவு சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலிருந்த போது இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அந்த ஆலயம் முழுமையாக புதுபிக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதர் ஆலயத்தின் அஸ்திவாரமும் அதையொட்டிய பீடமும் கிரனைட் கற்களைக் கொண்டு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தற்போது இருக்கும் வசதிகள் குறைவாக இருந்த நிலையிலும், இப்போது இருப்பதைவிட மிகவும் மேம்பட்ட தொழிற்நுட்பத்துடன் இப்படியான கலைநயத்துடன் கூடிய ஆலயங்களைக் கட்டினர் எனவும், அதை எதிர்கால சந்ததியினருக்கு பாதுக்காத்து வைக்கும் நோக்கிலேயே இந்தப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.