2010-09-04 14:39:19

கம்போடியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு மருத்துவச்சி இருக்கின்றனர்


செப்.04,2010. கம்போடியா நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு மருத்துவச்சி இருப்பதாக வத்திக்கான் செய்தி நிறுவனமான Fides கூறியது.

இவர்கள் தாய்லாந்தில் ஆயிரம் பேருக்கு இருவர், ஜப்பானில் ஆயிரம் பேருக்கு 12 பேர் என்ற விகிதத்தில் இருக்கின்றனர் என்று அந்நிறுவனம் கூறியது.

கம்போடிய நாடு 2015ம் ஆண்டுக்குள் ஐ.நா.வின் மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைய வேண்டுமெனில் அவ்வாண்டுக்குள் கர்ப்பிணி தாய்மாரின் இறப்பை ஒரு இலட்சத்துக்கு 140 ஆகக் குறைக்க வேண்டும். தற்சமயம் இவ்விகிதம் ஒரு இலட்சத்துக்கு 540 ஆக உள்ளது.







All the contents on this site are copyrighted ©.