2010-09-04 14:34:11

கத்தோலிக்கப் பொதுநிலையினர் ஆசிய மக்களின் நலனுக்கான நம்பிக்கைகள் - கர்தினால் ரில்கோ


செப்.04,2010. கத்தோலிக்கப் பொதுநிலையினர் ஆசிய மக்களின் நலனுக்கான நம்பிக்கையின் சாட்சிகளாக இருக்கின்றார்கள் என்று திருப்பீடப் பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ கூறினார்.

ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய கர்தினால் ரில்கோ, திருச்சபையின் பணியில் தங்கள் அழைப்பையும் பணியையும் உணரும் பக்குவம் நிறைந்த பொதுநிலையினரை உருவாக்குவது இம்மாநாட்டில் முக்கிய இடம் வகித்தது என்றார்.

பொதுநிலையினரை உருவாக்குவதில் பங்குத்தளங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நற்செய்தி அறிவிப்புப் பணியை வெறும் மனித முன்னேற்றப் பணிகளோடு மட்டும் நிறுத்திவிடக்கூடாது என்றுரைத்த கர்தினால், இரண்டாயிரமாம் ஆண்டில் தற்போதைய திருத்தந்தை முன்மொழிந்த நற்செய்தி அறிவிப்புக்கான மூன்று அடிப்படை விதிகளையும் விளக்கினார்.

நற்செய்தி அறிவித்தல் செபச்சூழலில் இடம் பெற வேண்டும் என்றும், இந்தப் பணியில் உடனடிப் பலன்கள் கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம் என்றும் இந்தப் பணி எப்பொழுதும் திருச்சிலுவையின் உண்மைகளோடு ஒத்துச் செல்வது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாடு தென் கொரியாவின் சோலில் இஞ்ஞாயிறன்று திருப்பலியோடு நிறைவடைகின்றது.








All the contents on this site are copyrighted ©.