2010-09-03 16:22:29

கடுமையானப் பேரிடர்களை எதிர் கொள்ளக்கூடிய நிலையில் உலகு இல்லை - ஐ.நா.உயர் அதிகாரி எச்சரிக்கை


செப்.03,2010. பாகிஸ்தான், இரஷ்யா போன்ற இடங்களில் இடம் பெற்றுள்ள கடுமையானப் பேரிடர்களை எதிர் கொள்ளக்கூடிய நிலையில் உலகு இல்லை என்று வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

மிகக் குறைவான கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட எதிர்காலத்தை அமைப்பதற்கு அரசுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐ.நா. அதிகாரி Christina Figueres கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கும் இரஷ்யக் காட்டுத்தீயும் உலக வெப்பநிலை மாற்றத்தோடு எவ்வளவு தூரம் தொடர்புடையன என்பதை அறிவியல் தெளிவுபடுத்துகின்றது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

வளரும் நாடுகள் 2012ம் ஆண்டுக்குள் வெப்பநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு உதவியாக தொழிற் வளர்ச்சியடைந்த நாடுகள் மூவாயிரம் கோடி டாலரை வழங்குவதற்கு உறுதியளித்திருப்பதையும் நிருபர்களிடம் கூறினார் Figueres.








All the contents on this site are copyrighted ©.