2010-09-03 16:23:30

ஆஸ்ட்ரியாவில் சர்வதேச ஊழல் எதிர்ப்புக் கழகம்


செப்.03,2010. உலக அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் பயிற்சிகள் ஆய்வுகள் மற்றும் தொழிற்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் ஐ.நா.வின் துணையுடன் ஆஸ்ட்ரியாவில் சர்வதேச ஊழல் எதிர்ப்புக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரியாவின் Laxenburg ஐ மையமாக்க கொண்டு தொடங்கப்படுள்ள IACA என்ற கழகம் ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்பாட்டை இன்னும் அதிகத் திறம்படச் செயல்படுத்துவதற்கு உதவியாகப் பொது மக்களுக்கும் தனியார் துறைகளுக்கும் பயிற்சிகள் வழங்கும்.

2007ம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, வளரும் நாடுகளில் அரசு சொத்துக்களிலிருந்து ஆண்டுக்கு நூறாயிரம் கோடி டாலர் முதல் 16 ஆயிரம் கோடி டாலர் வரைத் திருடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்பாடு 2005ம் ஆண்டு டிசம்பரில் கொண்டுவரப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.