2010-09-03 16:24:30

அமெரிக்காவில் 49மில்லியன் பேர் உணவின்றி தவிப்பு


செப்.03,2010. அமெரிக்காவில் வசிப்பவர்களில் 4 கோடியே 90 இலட்சம் பேர் போதிய உணவின்றி துன்புறுகின்றனர் என்று அமெரிக்க டயடிக் அசோஷியேசன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு உதவியாக 30 நாட்கள் 30 வழிகள் என்ற இலக்குடன் இம்மாதத்தில் திட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.

இது குறித்துப் பேசிய, பசி விவகாரங்கள் குறித்தத் தேசியத் தலைவர் ஜான் அர்னால்டு, அமெரிக்காவில் 18,000 கோடி பவுண்டு உணவுகள் வீணடிக்கப்படுகின்றன, இவற்றில் 3,200 கோடி பவுண்டு உணவுகளைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார்.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்குப் போதிய வேலையின்மை, முறையான வரவு-செலவின்மை, மனஅழுத்தம், குடும்பப் பிரச்சனை, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.