2010-09-02 15:46:05

போபால் விபத்தில் உயிரோடு தப்பித்தவர்களைக் கண்டுபிடிக்க புதியதொரு கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் போபால் பேராயர்


செப்.02,2010. இந்தியாவில் 1984ல் நிகழ்ந்த போபால் நச்சு வாயு விபத்தில் உயிரோடு தப்பித்தவர்களைப் புதியதொரு கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

இச்செவ்வாயன்று இந்தியாவின் தலைமை நீதி மன்றம் இந்த வழக்கை மீண்டும் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, பேராயர் கொர்னேலியோ இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வழக்கை மீண்டும் துவங்கியிருப்பதால், குற்றம் செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட, துயருறும் மக்களுக்கு நீதி கிடைப்பதும், அவர்களது துயர் நீக்கப்படுதலுமே தனது எதிர்பார்ப்பு என்று பேராயர் கொர்னேலியோ வலியுறுத்தியுள்ளார்.

இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டோரை மீண்டும் கணக்கெடுக்க அரசுக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்ய, திருச்சபை தயாராக உள்ளது எனவும் போபால் பேராயர் கூறினார்.

1984 ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி நடந்த இந்த விபத்தில் 25,000 உயிர்கள் பலியாயின. 5,50,000 பேருக்கு மேல் நீதி கிடைக்க போராடி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.