2010-09-01 16:13:51

தொடர்பு சாதனங்கள் குறித்த அரசின் தடைகள் கவலையை அளிக்கிறது - தென்னாப்ரிக்க ஆயர் பேரவை


செப்.01, 2010 தொடர்பு சாதனங்கள் குறித்து தென்னாப்ரிக்க அரசு வெளியிட எண்ணியுள்ள தடைகள் பெரும் கவலையை அளிப்பதாக தென்னாப்ரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.

பொறுப்பற்ற முறையில் தவறான செய்திகள் வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் அரசு அறிவித்துள்ளது மிகவும் பொதுவான ஒரு கூற்றாக உள்ளது என்றும், அரசு வெளியிட எண்ணியுள்ள இந்த ஆணையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தென்னாப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதியாகப் பேசிய கர்தினால் Wilfrid Napier, இந்த ஆணையில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி, திறந்த மனதோடும் பொறுப்பான முறையிலும் தகவல்கள் பரிமாறப்படுவது எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் அவசியம் என்று கூறினார்.

இது போன்ற அரசுத் தடைகள் இனவெறிக் கொள்கை தென்னாப்ரிக்காவில் இருந்த பழைய காலத்திற்கு மீண்டும் இந்த நாட்டைக் கொண்டு செல்லும் ஆபத்து உள்ளதெனவும், எனவே இந்த ஆணையை அரசு மறு பரிசீலனை செய்யவேண்டுமெனவும் ஆயர் பேரவையின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.