2010-09-01 16:26:02

செப்டம்பர் 02 – நாளும் ஒரு நல்லெண்ணம்


தாய் வயிற்றில் சுமந்தாள்.

தந்தை தோளில் சுமந்தார்.

காதலி இதயத்தில் சுமந்தாள்.

நண்பன் உன்னை சுமக்கவில்லை, ஏனெனில்

நட்பு ஒரு சுமையல்ல.

நிழல் கூட மாலையில் பிரியும்,

என் நினைவுகள் என்றும் பிரியாது

என கவிஞன் ஒருவன் தன் நண்பனுக்கு எழுதிய கவிதை நட்பின் உள் அர்த்தத்தைப் பிழிந்துத் தருவதாய் இருந்தது.

நட்பு என்பது எதிர்பார்ப்புகள் அற்றது. ஆகவே சுமை என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை.

நட்பு என்பது, வாழ்விலும் தாழ்விலும் சமபங்கு கொள்வதாய், தூய்மை சிந்தனை உடையதாய், பிரிவிலும் துயரிலும் துடிக்கக்கூடியதாய், ஒரே பறவையின் இரு சிறகுகளாய் இருக்கக் கூடியது.

சூரியன் போல் தேய்வின்றி எந்நாளும் முழுநிறைவாய், ஓயாமல் நலம் நாடும் கடலலையாய், குறையொழிக்கும் அக்னியாய், எவ்விடமும் ஒரே மட்டமாய் நிற்கும் நீராய், எதையும் தாங்கும் நிலமாய், எங்கும் நிறைந்திருக்கும் காற்றாய் நிற்பதே நட்பு.

நட்பை அனுபவித்து, அதன் இலக்கணம் அறிவோம்








All the contents on this site are copyrighted ©.