2010-09-01 16:17:15

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கத்தோலிக்கர்கள் உதவி


செப்.01, 2010 இந்தோனேசியாவின் வட சுமத்ரா பகுதியில் இஞ்ஞாயிறன்று வெடித்த சினபுங் (Sinabung) எரிமலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் கத்தோலிக்கர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல நூற்றாண்டுகளாய் அமைதியாய் இருந்த சினபுங் எரிமலை, ஞாயிறு அதிகாலையில் வெடித்ததில், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள 8,000 கத்தோலிக்கர் உட்பட 40,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எரிமலை தொடர்ந்து திங்களன்றும் சகதியையும், நெருப்புக் குழம்பையும் வெளியேற்றிய வண்ணம் இருந்ததென செய்திகள் கூறுகின்றன.

எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் செய்வதில், இந்தோனேசியா காரித்தாஸ் அமைப்புடன் சேர்ந்து பல கத்தோலிக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். காரித்தாஸ் அமைப்பின் உதவித்தொகை ஏற்கனவே இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதென இவ்வமைப்பின் இந்தோனேசியா இயக்குனர் அருள்தந்தை Paulus Sigit Pramudji கூறினார்.








All the contents on this site are copyrighted ©.