2010-08-31 15:59:48

செப்டம்பர், 01 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1715 - பிரான்சின் அரசர் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். இவரே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசர்.
1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்க இரயில் சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் கொல்லப்பட்டனர்.
1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.
1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. 1912, ஏப்ரல் 15ம் நாள் டைட்டானிக் கப்பல் தன் முதல் பயணத்தின் போது மூழ்கியது.
 செப்டம்பர், 01 - லிபியாவில் - புரட்சி நாள், சிங்கப்பூரில் - ஆசிரியர் நாள்.







All the contents on this site are copyrighted ©.