2010-08-31 15:54:47

இந்தியாவில் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் ஆறாயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்


ஆக.31,2010. இந்தியாவில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் தன்னார்வப் பணியில் ஆறாயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் Francis Kodiyan, Varghese Karippery ஆகிய இரண்டு குருத்துவ மாணவர்களால் தொடங்கப்பட்ட PMI என்ற இந்திய தன்னார்வச் சிறைப் பணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மறுவாழ்வுப் பணியைச் செய்து வருகின்றனர்.

இவ்வமைப்பின் தலைவரான கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் பேசுகையில், சிறையில் இருக்கும் எல்லாருமே குற்றவாளிகள் அல்ல, இவர்களில் பலர் அநீதியாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றார்.

இந்தியாவிலுள்ள கைதிகளுள் 70 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள். பெரும்பாலானக் கைதிகள் நீண்டகாலம் விசாரணையின்றி இருப்பவர்கள். இக்கைதிகளுள் 65 விழுக்காட்டினர் இளையோர் என்பது வருத்தத்துக்குரியது என்று ஆயர் ரெமிஜியுஸ் கூறினார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முப்பது மறுவாழ்வு மையங்களில் வேலை செய்யும் இந்தக் கிறிஸ்தவப் பணியாளர்கள், கைதிகளைச் சந்திப்பது, அவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பது போன்ற பல பணிகளைச் செய்து வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.