2010-08-31 15:53:52

அர்ஜென்டினா, கருக்கலைப்பை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது – சான் லூயிஸ் ஆயர்


ஆக.31,2010. மேலும், கருக்கலைப்பை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட இடமாக அர்ஜென்டினா நாடு மாறி வருகிறது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அதிகாரிகள், “கர்ப்பத்தை முடித்தல்” என்று பெயரிட்டு கருக்கலைப்பை ஊக்குவித்து வருவதைக் குறைகூறியுள்ள சான் லூயிஸ் ஆயர் ஹோர்ஜே லூயிஸ் லோனா, “கர்ப்பத்தை முடித்தல்” என்பது உயிரை முழுவதுமாக அழிப்பதாகும் என்றும், கருக்கலைப்பு என்பது கொலை செய்வதாகும் என்றும் கூறியுள்ளார்.

சிறார், ஒரு தந்தையையும் ஒரு தாயையும் கொண்டிருக்க வேண்டிய அவர்களின் உரிமைக்கு எதிராகப் பாகுபாடுகள் காட்டப்படுவதையும் ஆயர் கண்டித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.