2010-08-30 14:41:59

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உணவு உதவிகளை வழங்கினர் பாகிஸ்தானிய ஆயர்கள்.


ஆகஸ்ட் 30, 2010. பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் குடிநீரையும் அப்பகுதிகளுக்கே நேரடியாகச்சென்று வழங்கியுள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள்.

முல்டான் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆயர் ஆன்ட்ரூ ஃப்ரான்சிஸ் மற்றும் லாகூர் ஆங்கிலிக்கன் ஆயர் அலக்ஸாண்டர் ஜான் மாலிக் ஆகியோர் தலைமையில் உணவுப்பொருட்களை ஏற்றிச்சென்ற குழுவுடன் பாகிஸ்தான் சிறுபான்மையினர்க்கான அமைச்சர் Shahbaz Bhatti 6 வண்டி நிறைய நிவாரணப்பொருட்களுடன் சென்றார். முல்டான் பேராலயத்திலிருந்து புறப்பட்ட இக்கிறிஸ்தவத் தலைவர்களின் உதவிக்குழு, 190 கிலோ மீட்டர்கள் பிரயாணம் செய்து, பாதிக்கப்பட்டோர் தங்கியிருக்கும் முகாம்களுக்குள் சென்று ஒவ்வொருவருக்கும் உதவிகளை வழங்கியது.

இரு கிறிஸ்தவ ஆயர்களும் மக்களுக்கான உதவிகளை நேரடியாக வழங்கியதுடன் அவர்களின் துயரச் சம்பவங்களுக்குச் செவிமடுத்து, ஆறுதலும் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.