2010-08-30 16:00:11

ஆகஸ்ட் 31 நாளும் ஒரு நல்லெண்ணம்


இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீதிபதி ஒருவர் ஒரே நாளில் 111 வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லி நீதித்துறைக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார். காலம்தாழ்த்திய நீதி யாருக்கும் பயன் தராது என்பார்கள். ஆயினும் ஆந்திராவில் குண்டூர் மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தியாவில் சுமார் மூன்று கோடி வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது பலருக்கும் கவலை அளித்துள்ள நிலையில், நீண்ட காலம் தீர்ப்பளிக்கப்படாமல் இருந்த வழக்குக் கட்டுகளை தூசி தட்டி நீதிமன்றத்துக்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதில் முடிக்கும் தருவாயில் இருந்த 111 வழக்குகளுக்குத் தீர்ப்பளித்துள்ளார். இதில் 33 பேரைக் குற்றமற்றவர்கள் என விடுவித்துள்ளார். தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொண்டு திருந்துவதாகக் கூறிய சிலருக்கு மன்னிப்பும் வழங்கியுள்ளார். பொதுத் தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட நான்கு இலட்சம் ரூபாயை அரசு கருவூலத்தில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு சில நீதிபதிகள் ஒரே நாளில் அதிகபட்சமாக எண்பது வழக்குகளுக்குத் தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியின் முதுகெலும்பு ஒருவரின் நம்பிக்கையே. நீ உனது முயற்சிகளில் வெற்றியடைய முதலில் உன்னையே நம்பு. குறிப்பாக, உனது மனதிற்கு உன்னை ஒரு சாதனைச் சிற்பியாக்கும் ஆற்றல் உண்டு என நம்பு.








All the contents on this site are copyrighted ©.