2010-08-28 15:49:31

ஆகஸ்ட் 29, நாளும் ஒரு நல்லெண்ணம்


22 குழைந்தைகள் கொண்ட குடும்பத்தில் 20வது குழைந்தையாகப் பிறந்தவர் வில்மா ருடால்ப் (Wilma Rudolph). அவருக்கு நான்கு வயதான போது, வந்தக் கடும் காய்ச்சலில் இடது கால் முற்றிலும் செயல் இழந்தது. உலோகத்தால் ஆன கால் பிடிப்புகள் பொருத்தப்பட்டன.
"எனக்கு ஐந்து வயதான போது, என் கால்களில் பொருத்தப்பட்டிருந்த அந்தப் பிடிப்புகளை எப்படி நீக்குவது என்பதே என் பெரும் முயற்சியாக இருந்தது." என்று வில்மா கூறினார்.
ஒன்பது வயதில் வில்மா தன் கால் பிடிப்புகளை அகற்றி விட்டு நடக்க ஆரம்பித்தார். அவரது முயற்சியைக் கண்டவர்கள் எல்லாம் அவரை ஏளனம் செய்தனர். 13வது வயதில் தானாகவே நடக்க ஆரம்பித்தார். அதைக் கண்ட மருத்துவர்கள் மருத்துவ உலகில் இது ஒரு புதுமை என்றனர்.
அதே ஆண்டு வில்மா ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் தோற்றார், பந்தயத்தில் பங்கு பெற்ற அனைவரிலும் இறுதியாக வந்தார். இருப்பினும், தொடர்ந்து முயன்றார்.
ஒரு நாள் ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பல பந்தயங்களில் வென்றார்.4 வயதுக்கு மேல் நடக்கவே முடியாதென்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட வில்மா ருடால்ப், 1960ம் ஆண்டு தன் 20 வது வயதில் ரோமையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். முடியாது என்பதை முயற்சியாலும், நடக்காது என்பதை நம்பிக்கையாலும் நடக்க வைத்தவர் வில்மா ருடால்ஃப்.







All the contents on this site are copyrighted ©.