2010-08-27 15:13:44

மெக்சிகோவில் கொல்லப்பட்ட குடியேற்றதாரர்க்காகக் கத்தோலிக்கர் செபம்


ஆக.27,2010. மெக்சிகோவின் வடகிழக்கு மாநிலமான Tamaulipas ல் மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 72 குடியேற்றதாரரின் உடல்கள் இச்செவ்வாயன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் திட்டமிட்ட கும்பல்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பின்னர் மிகுந்த எண்ணிக்கையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.

ஈக்குவதோர், பிரேசில், எல் சால்வதோர், ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த 72 பேரும் சரியான ஆவணங்களின்றி இருந்தவர்கள். இவர்களில் 14 பேர் பெண்கள். இவர்கள் எல்லாரும் போதைப் பொருள் வியாபாரிகளால் கடத்தப்பட்டு பிணையல் தொகை செலுத்த முடியாமல் இருந்த பின்னர் கொலை செய்யப்பட்டனர் என்று Reforma தினத்தாள் கூறியது.

கொல்லப்பட்ட இந்தக் குடியேற்றதாரரின் நிறை சாந்திக்காக மெக்சிகோ கத்தோலிக்கர் திருப்பலி நிகழ்த்தி செபித்தனர்







All the contents on this site are copyrighted ©.