2010-08-27 15:14:28

மன்னார் வளைகுடாவின் நிலையை கண்டு ஐ.நா., திட்டக்குழு வருத்தம்


ஆக.27,2010. உலகம் வெப்பமடைந்து வருதல், சட்டத்துக்குப் புறம்பே வேட்டையாடுதல் ஆகியவற்றால் வங்காள விரிகுடாப் பகுதியில் பவளப்பாறைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.வல்லுனர் ஒருவர் எச்சரித்தார்.

"மன்னார் வளைகுடாவின் இன்றைய நிலை குறித்து இரண்டு ஆண்டுகளாக ஆய்வு நடத்திய ஐ.நா.வின் உலக உணவு திட்ட நிறுவனத்தின் திட்ட அலுவலகர் கே.எஸ்.முரளி இவ்வாறு கூறினார்.

உலகம் வெப்பமடைந்து வருவதால் 2030க்குள் பவளப்பாறைகள் அழிந்துவிடக்கூடும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகளில் கணிக்கப்பட்டது, ஆயினும் தற்போதைய நிலைப்படி அதற்கு முன்னதாக பவளப்பாறைகள் அழியக்கூடும் என்று முரளி தெரிவித்தார்.

பசி மற்றும் ஏழ்மையை அகற்றுவது குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் புதுடெல்லியில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் இதனைத் தெரிவித்தார் முரளி.

மன்னார் வளைகுடா இந்தியாவின் கடல்சார் தேசிய பூங்கா எனக் கருதப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.