2010-08-27 15:16:22

குடியேற்றதாரப் பெண்களின் மேம்பாட்டுக்காக இந்தியா ஐ.நா.வுடன் இணைந்து செயல்படத் தீர்மானம்


ஆக.27,2010. இந்தியாவிலிருந்து வேறு நாடுகளில் குடியேறியுள்ள பெண்களின் மேம்பாடு மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக ஐ.நா.வுடன் இணைந்து இந்தியா பணிசெய்வதற்கு உறுதியளித்துள்ளது என இந்திய அதிகாரி ஒருவர் இவ்வெள்ளியன்று தெரிவித்தார்.

UNIFEM என்ற ஐ.நா.வின் பெண்கள் வளர்ச்சி நிதி அமைப்புடன் சேர்ந்து செயல்படுவதற்கு MOIA என்ற வெளிநாடுகளுக்கான இந்திய விவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இந்திய குடியேற்றதாரத் தொழிலாளரில் 40 விழுக்காட்டினர் பெண்கள். இவர்களில் 99 விழுக்காட்டினர் அமைப்புமுறை சாராத் தொழிலாளர்கள்.

உலகிலுள்ள 19 கோடிக் குடியேற்றதாரத் தொழிலாளரில் 49.6 விழுக்காட்டினர் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.