2010-08-26 15:32:40

கர்நாடகா முதலமைச்சர் பிரஹலாத் ரமணியைக் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி கூறியுள்ளார்


ஆகஸ்ட் 26, 2010 சுதந்திர தினத்தன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரஹலாத் ரமணியைக் கர்நாடகா முதலமைச்சர் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி கூறியுள்ளார்.
பிரஹலாத் ரமணி கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென, இப்புதனன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தான் கூறியுள்ளதாகவும், அவர் அப்படி கேட்கத் தவறினால், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பெல்காம் ஆயர் பீட்டர் மசாடோவிடம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கை, தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார், கர்நாடகா தலத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருள்தந்தை Faustin Lobo.
இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் மதம் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்ற விண்ணப்பம் ஒன்றை அம்மாநில ஆளுநர் H.R.Bhardwaj இடம் பெங்களூரு பேராயர் Bernard Moras சமர்பித்துள்ளார்.மக்கள் பணியில் ஈடுப்பட்டிருக்கும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எவரும் எந்த ஒரு மதத்திற்கும் எதிராக மக்களைத் தூண்டும் வகையில் பேசுவதைத் தடை செய்ய வேண்டுமென்று பேராயர் தன் விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.