2010-08-26 15:33:00

இஸ்லாமியத் தொழுகைக்கூடம் அமைக்கப்படவுள்ளது குறித்து நியுயார்க் பேராயரும் நியுயார்க் மாநகர ஆளுநரும் சந்தித்துப் பேசினர்


ஆகஸ்ட் 26, 2010 நியுயார்க் நகரில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு தாக்கப்பட்ட அந்த இடத்திற்கருகே இஸ்லாமியத் தொழுகைக் கூடம் அமைக்கப்படவுள்ளதெனும் செய்தி அமெரிக்காவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
பரபரப்பான இந்த விவாதத்தை முன்னின்று நடத்த தான் தயாராக உள்ளதாக நியுயார்க் பேராயர் Timothy Dolan அண்மையில் அறிவித்ததை அடுத்து, நியுயார்க் மாநகர ஆளுநர் David Patersonம், பேராயர் Dolanம் இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினர்.பேராயரும் ஆளுநரும் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில், இஸ்லாமியத் தொழுகைக் கூடம் குறித்து நியுயார்க் மக்கள் மேற்கொள்ளும் விவாதங்கள் அவர்களை இன்னும் ஒற்றுமைப் படுத்தும் ஒரு முயற்சியாக இருப்பதையே தாங்கள் விரும்புவதாகக் கூறினர் என்று ஆளுநர் அலுவலகத்தின் தொடர்புத் துறை இயக்குனர் Morgan Hook கூறினார்.







All the contents on this site are copyrighted ©.