2010-08-26 16:08:24

ஆகஸ்ட் 27 நாளும் ஒரு நல்லெண்ணம்


“அன்பிற்குத் தடை என்றால் அந்த வேலிகளைத் தாண்டவே விரும்புவேன்”

இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா.

இந்த அன்னையின் கொல்கத்தா சிறார் இல்லச் சுவர்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளன

மக்கள் பலநேரங்களில் பகுத்தறிவுக்கு முரணானவர்களாக, தன்னலவாதிகளாகத் தெரிவார்கள். ஆயினும் அவர்களை மன்னித்துவிடு.

நீ கனிவாய் இருக்கும் பொழுது மக்கள் உன்னைத் தன்னலவாதி என்று குறை சொல்வார்கள். இருந்தபோதிலும் கனிவுடன் நட.

நீ நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் மக்கள் உன்னை ஏமாற்றக்கூடும். ஆயினும் நீ நேர்மையாகவும் உண்மையாகவும் இரு.

பல ஆண்டுகளாக நீ உருவாக்கிய ஒன்றை பிறர் ஒரே இரவில் அழிக்கக்கூடும். எனினும் உருவாக்கிக் கொண்டே இரு.

உன்னை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் பார்ப்பவர்கள் உன்மேல் பொறாமைப்படக்கூடும். எனினும் மகிழ்ச்சியாய் இரு.

இன்று நீ செய்யும் நன்மை மறக்கப்படலாம். இருந்தாலும் நன்மை செய்து கொண்டே இரு.

உன்னில் இருப்பதில் மிக நல்லதைக் கொடுத்தாலும் அது போதுமானதாக இருக்காது. எனினும் நல்லதைக் கொடுத்துக் கொண்டே இரு.

எந்த ஒரு செயலை நீ அலசும் போதும் அது உனக்கும் கடவுளுக்கும் இடையேயான அலசலாக இருக்கட்டும். உனக்கும் பிறருக்கும் இடையேயானதாக ஒருபோதும் இருக்கக் கூடாது.








All the contents on this site are copyrighted ©.