2010-08-25 17:29:11

பெற்றோர்-பிள்ளை பிணைப்பை உடைக்கும் நோக்குடைய நடவடிக்கைகள் குறித்து வத்திக்கான் தினத்தாள் எச்சரிக்கை


ஆக.25,2010. இம்மாதம் 12ம் தேதி தொடங்கியுள்ள சர்வதேச இளையோர் ஆண்டில் கருக்கலைப்பை ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து திருப்பீடசார்பு தினத்தாள் L'Osservatore Romano எச்சரித்துள்ளது.
UNFPA என்ற ஐ.நா.வின் மக்கள்தொகை நிதி அமைப்பின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முயற்சிகள் குறித்து எச்சரித்துள்ள வத்திக்கான் தினத்தாள் பெற்றோர்-பிள்ளை பிணைப்பை உடைக்கும் நோக்குடைய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்சமயம் மெக்சிகோவில் நடைபெற்று வரும் பன்னாட்டுக் கருத்தரங்கின் விவாதத்திற்கான முன்வரைவு தொகுப்பில் சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தம் பற்றி எந்தவித மேற்கோள்களும் குறிப்பிடப்படவில்லை என்றும் அத்தினத்தாள் கூறியது. அதேசமயம், உலக இளையோர் பாராளுமன்றத்தால் இம்மாதம் 13ம் தேதி ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட விழுமியங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு L'Osservatore Romano பரிந்துரைத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.