2010-08-24 16:40:48

கருக்கலைத்தலை மேற்கொள்ள பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படக்கூடாது என்கிறார் அமெரிக்க கர்தினால்.


ஆகஸ்ட் 24, 2010. கருக்கலைத்தலுக்கு நிதி உதவி வழங்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் செயல்பாட்டை நிரந்தரமாகத் தடைச்செய்யும் சட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் அவை முழு ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் டேனியல் தி நார்தோ.

நியாயமான காரணங்கள் இன்றி தங்கள் விருப்பம்போல் மக்கள் கருக்கலைத்தலை மேற்கொள்ள பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தற்போது இரு மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்வரைவுச் சட்டம் அனைத்து பிரதிநிதிகளாலும் ஊக்குவிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என்றார், வாழ்வு ஆதரவு நடவடிக்கைகளுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அவையின் தலைவர் கர்தினால் திநார்தோ.

கருக்கலைத்தலைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் உறுதியானதாக, தெளிவானதாக இருக்கின்ற போதிலும் அவைகளை அமுல்படுத்துவதில் உறுதிப்பாடு காணப்படுவதில்லை என்ற கவலையையும் வெளியிட்டார் கர்தினால்.








All the contents on this site are copyrighted ©.