2010-08-23 14:49:17

இலங்கை அதிபரைச் சந்தித்து நாட்டின் நிலை குறித்து விவாதித்தனர் அந்நாட்டு ஆயர்கள்.


ஆகஸ்ட் 23, 2010. இஞ்ஞாயிறன்று இலங்கை அதிபரைச் சந்தித்த அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், நாட்டுக்குள் குடிபெயர்ந்த மக்களைக் குடியமர்த்துதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித் தலைமையில் சென்ற ஆயர்கள் குழு, அரசுத்தலைவர், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் ஆன சந்திப்பின்போது, மக்களைக் குடியமர்த்தல், கல்வி, மீன்பிடித் தொழில், மத ஐக்கியம் போன்றவை குறித்து விவாதித்தனர்.

தமிழர் பகுதிகளின் ஆயர்களான தாமஸ் சௌந்தரநாயகம், இராயப்பு ஜோசப்பு மற்றும் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆகியோர், போரினால் குடிபெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தவேண்டும் எனவும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தனர்.

புதிதாக வீடுகளைக் கட்டிக்கொடுப்பது உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கென அனைத்து உதவிகளையும் ஆற்ற தலத்திருச்சபை தயாராக இருப்பதாக அரசுத்தலைவரிடம் உறுதி கூறினார் பேராயர் ரஞ்சித்.








All the contents on this site are copyrighted ©.