2010-08-23 14:53:28

இந்திய இலங்கை மீனவர்கள் இடையே உடன்பாடு


ஆகஸ்ட் 23, 2010 இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் இடைக்கால ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்படி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநில மீனவர்கள் சங்க ஒருங்கமைப்பின் உறுப்பினரான சூரியகுமார் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இருதரப்பு மீனவர்கள் மற்றும் அரசைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஒரு கண்காணிப்பு குழு உருவாக்கபடும் என்று அவர் கூறினார்.

இலங்கை மீனவர்களின் வளங்களை அழிக்காமல் அவற்றைக் காப்பாற்றக்கூடிய வலைகளை கொண்டு மீன்களை பிடிப்பதற்கான அனுமதியை கொடுத்திருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இது ஒராண்டு காலத்திற்கு இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு வருடத்திற்கு 70 நாட்கள் மட்டுமே இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் இலங்கை எல்லைக்குள் நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.