2010-08-21 16:06:05

சுருங்குகிறதா நிலவு?-விஞ்ஞானிகள்


ஆக.21,2010. நிலவின் உட்பகுதி குளிர்ந்து வருவதால் அதன் ஒட்டுமொத்த அளவும் சுருங்கிவருவதாக சைன்ஸ் என்கிற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்று கூறுகிறது.

நிலவின் மேற்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிளவுகளை மையப்படுத்தி விஞ்ஞானிகள் இவ்வாறு சொல்லியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள், 14 புதிய பிளவுகளை கண்டறிந்துள்ளன.

கடந்து சென்ற பில்லியன் ஆண்டுகளில் நிலவு 100 மீட்டர் அளவு சுருங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.