2010-08-21 15:56:02

இலங்கைப் போரின் போது காணாமற்போன அருள்திரு ஜிம் பிரவுனை சாதி இன வேறுபாடின்றி மக்கள் நினைவுகூர்ந்தனர்


ஆக.21,2010. இலங்கைப் போரின் போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காணாமற்போன அருள்திரு ஜிம் பிரவுன் மற்றும் அவரது உதவியாளர் விமலதாசை நினைவுகூரும் நிகழ்ச்சியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டனர்.

கொழும்பு நகரிலுள்ள சமூக சமய மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு அக்குருவின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டினர்.

அருள்திரு ஜிம் பிரவுன் பங்குத்தளத்திற்கு மிக அருகாமையில் தாக்குதல்கள் நடைபெற்ற போது அவர் பொது மக்களுக்கு ஆலயத்தைத் திறந்து தஞ்சம் அளித்தார். போரில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு இராணுவத்திடம் அனுமதி கேட்டார். அச்சமயம் அவர் இலங்கை கடற்படை அதிகாரியால் அச்சுறுத்தப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

பின்னர் அல்லிப்பிடியில் அருள்திரு ஜிம் பிரவுனும் 5 பிள்ளைகளுக்குத் தந்தையுமான விமலதாஸ் என்பவரும் காணாமற்போயினர்.







All the contents on this site are copyrighted ©.