2010-08-21 15:54:50

இந்தோனேசிய அரசுத்தலைவர் சமய சுதந்திரத்தை மதிக்குமாறு ஆயர்கள் அழைப்பு


ஆக.21,2010. இந்தோனேசிய அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyono சமய சுதந்திரத்தை மதிக்கும் செயல்பாடுகளில் அதிக தைரியத்தை வெளிப்படுத்துமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Martinus Dogma Situmorang மற்றும் அதன் செயலர் பேரருட்திரு Johannes Pujasumarta கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்ப்டடுள்ளது.

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம் பெறும் தீவிரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அரசுத்தலைவரின் வலுவானத் தலையீடு தேவை என்று ஆயர்கள் அரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம் கூறுகிறது.

இந்தோனேசியாவின் பெக்காசியிலும் போகோரிலும் அண்மை வாரங்களில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம் பெற்ற தாக்குதல்கள் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.