2010-08-20 15:43:09

ஒரே பாலினத் திருமணங்கள் முன்வைக்கும் சவால்களைச் சந்திப்பதற்கு அர்ஜென்டினா ஆயர்கள் புதிய யுக்திகள்


ஆக.20,2010. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்திருப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கான யுக்திகளை வகுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

புவெனோஸ் ஐரெஸ் பேராயர் கர்தினால் ஹோர்சே பெர்கோலியோ தலைமையில் ஏறத்தாழ இருபது ஆயர்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில், அர்ஜென்டினா நாட்டின் புதிய திருமணச் சட்டம் வருங்காலத் தலைமுறை மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விவாதித்தனர்.

அர்ஜென்டினாவில் ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்குவதற்கு நாடெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியபோதிலும் அந்நாட்டு அரசு கடந்த ஜூலை மாத மத்தியில் இதனைச் சட்டமாக்கியது.








All the contents on this site are copyrighted ©.