2010-08-19 15:00:53

சீனாவின் Tianjin மறை மாவட்டத்தில் புலம்பெயர்ந்தப் பணியாளர்களுக்கு இலவச நீதி ஆலோசனைகளை வழங்கும் திட்டம்


ஆகஸ்ட் 19, 2010. சீனாவின் வட பகுதியில் பணி புரியும் புலம்பெயர்ந்தப் பணியாளர்களுக்கு இலவச நீதி ஆலோசனைகளை வழங்கும் திட்டம் ஒன்றை அந்நாட்டின் Tianjin மறை மாவட்டம் ஆரம்பிக்க உள்ளது.
செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இம்மையத்தின் வழியாக, அந்நாட்டில் பணி புரிய அயல் நாடுகளிலிருந்து வரும் பணியாளர்களின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண முடியும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் இந்த மையத்தின் இயக்குனரான அருள்தந்தை ஜான் பாப்டிஸ்ட் சாய் வேய்.
இந்த மையம் Nankai பல்கலைகழகத்தின் சட்டப் பள்ளியுடனும், Tianjin மறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தன்னார்வக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருக்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.அண்மையில் வெளியான ஒரு புள்ளிவிவரம், சீனாவில் 23 கோடி புலம் பெயர்ந்த பணியாளர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்குப் பணி புரிய 35 மறைமாவட்ட மையங்கள் உள்ளன என்றும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.