2010-08-18 15:50:20

மத்திய கிழக்கு நாடுகளில் கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனம் அன்னை தெரேசாவின் நினைவாக நடத்தும் நிகழ்ச்சிகள்


ஆக.18,2010 முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்தநாளையொட்டி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள Tele Lumiere and Noursat என்ற ஒரே கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனம் அன்னையின் நினைவாக பல நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளின் ஒரு முக்கிய பகுதியாக, பத்தடி உயரமுள்ள அன்னையின் உருவச் சிலை, லெபனன் பகுதியில் அன்னை தெரேசாவின் பிறரன்புப் பணி சகோதரிகளின் முதல் கன்னியர் மடம் நிறுவப்பட்ட Sed El Bouchrieh என்ற நகரில் அமைக்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தச் சிலை அன்னையின் பிறந்த நாளான ஆகஸ்ட் 26 அன்று நிறுவப்படுவதையொட்டி நிகழும் விழாவை Beirutல் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளில் இந்த தொலைக்காட்சி நிறுவனம் இறங்கியுள்ளது.அன்னை தெரேசா 1982ம் ஆண்டு லெபனன் பகுதிக்குச் சென்றிருந்த போது, உடல் ஊனமுற்றோர், அனாதைகள் 50 பேரை இஸ்ரேல் படைகளின் தாக்குதல் பகுதிகளிலிருந்து வெளியே கொண்டு வந்து, பாதுகாப்பு அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.