2010-08-16 15:41:56

நிலங்கள் பாலைவனமாவதைத் தடுக்க மரங்களை நட்டு வருகிறார் பங்களாதேஷ் கத்தோலிக்க குரு ஒருவர்.


ஆகஸ்ட் 16, 2010 நிலங்கள் பாலைவனமாவதைத் தடுக்க மரங்களை நடுங்கள் என்ற பிரச்சாரத்துடன் பங்களாதேசின் வடமேற்குப் பகுதியில் அந்நாட்டுக் கத்தோலிக்க குரு ஒருவர் ஒரே மாதத்தில் மூவாயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

பசுமை பங்களாதேஷ் என்ற திட்டத்தின் அடிப்படையில் திருச்சபை மற்றும் அரசு நிலங்களில் இம்மரக்கன்றுகளை நட்டுள்ளார் குரு இக்னேசியஸ் பிந்து ஹெம்ப்ரோம்.

பங்களாதேஷின் வடமேற்கு பகுதி அடுத்த 20 ஆண்டுகளில் பாலைவனமாக மாறும் ஆபத்து உள்ளது என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறினார் அக்குரு.

தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் பழ மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவதோடு, அடுத்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு பழங்கள் மூலம் இலாபமும் கிட்டும் என்றார் குரு ஹெம்ப்ரோம்.

வரும் மாதத்தில் மேலும் 2000 பழ மற்றும் மூலிகைக் கன்றுகளை நட உள்ளதாகவும் அறிவித்தார் அவர்.








All the contents on this site are copyrighted ©.