2010-08-16 16:14:05

ஆகஸ்ட் 17 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்தக் கடற்கரை ஊரில் கடும் புயல் அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயம் ஒருவர் அந்தக் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார். அவருக்குச் சற்று முன்னால் ஒருவர் குனிந்து ஒரு நட்சத்திரமீனை எடுத்து கடல் தண்ணீரில் வீசியதைக் கவனித்தார். உடனே அந்த ஆளை நெருங்கி, ஐயா, இந்தக் கடற்கரையோ மிக நீளமானது. புயலில் அடித்துவரப்பட்ட இலட்சக்கணக்கான நட்சத்திரமீன்கள் இந்தக் கரையில் உயிர்ப்பிச்சை கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க ஒரு மீனை நீங்கள் காப்பாற்றுவதால் என்ன பெரிய வேறுபாடு வந்துவிடப் போகிறது என்று கேட்டார். தனது கையில் இருந்த அந்த நட்சத்திரமீனைப் பார்த்து கடல் நீரில் எறிந்தபடியே அவர் சொன்னார் – இந்த ஒரு மீனை வாழவிடுவதால் பெரிய மாற்றம் இருக்கும் என்று.

ஆம். சிறுதுளி பெரு வெள்ளம். ஒன்று ஒன்றாய்த்தான் நூறு சேரும். எந்த ஒரு முயற்சியும் அது சிறியதோ பெரியதோ எத்தகையதாய் இருந்தாலும் அதனால் நல்ல விளைவுகள் நிச்சயமாக இருக்கும்







All the contents on this site are copyrighted ©.