2010-08-14 15:59:09

பாகிஸ்தானில் ஆடம்பரமின்றி சுதந்திரதின கொண்டாட்டம்; வெள்ளப் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்


ஆக.14,2010. கடும் மழை வெள்ளத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் பாகிஸ்தானில் இச்சனிக்கிழமையன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் ஆடம்பரமின்றி நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

இந்த 63வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் Yusuf Raza Gilani , கடந்த 80 ஆண்டுகளில் மிகவும் கடுமையாய் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 2 கோடிப் பேர் வீடுகளை இழந்துள்ளனர், ஆயினும் உண்மையான எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றார்.

மேலும், இந்தியா பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா, அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியை தொடர்பு கொண்டு இந்திய 5 மில்லியன் டாலர் தொகைகை வழங்கிட முன்வந்திருப்பதாக கூறினார்.

இந்த வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதம் குறித்து உலக அளவில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. ஐ.நா., முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் தோல் வியாதிகள் மற்றும் வயிறு உபாதை நோய்கள் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக ஐ.நா., எச்சரித்துள்ளது. இதனையடுத்து தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் முடுக்கி விட்டுள்ளது








All the contents on this site are copyrighted ©.