2010-08-14 15:55:33

துருக்கி துறவு மடம் ஒன்றில் எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருவழிபாடு


ஆக.14,2010. துருக்கி, கான்ஸ்டாண்டிநோபிள் ஆர்த்தாடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தோலோமேயோ, (BartolomeoI) அந்நாட்டின் Panagìa Sümela என்ற புகழ் வாய்ந்த துறவு மடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி திருவழிபாடு நிகழ்த்துவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

துருக்கி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய ஆன்மீக மையங்களில் ஒன்றான இத்துறவு மடத்தில் அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவான இஞ்ஞாயிறன்று திருவழிபாடு நிகழ்த்துவதற்கு அந்நாட்டு அரசு எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அனுமதி அளித்திருக்கின்றது.

தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள Panagìa Sümela துறவுமடம், பெரிய Teodosio ஆட்சியில் 386ம் ஆண்டில் இரண்டு துறவிகளால் உருவாக்கப்பட்டது. இந்த இடத்தில் ஒரு குகையில் அன்னைமரியாவின் திருவுருவப்படம் இருந்துள்ளது.

கிரேக்க-துருக்கி சண்டையின் போது 1923ம் ஆண்டில் Panagìa Sümela பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைப் போல இத்துறவு மடத்திலிருந்து துறவிகள் வெளியேறினர். 1930ல் இந்த மாதா படம் கிரீசுக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.