2010-08-14 15:53:40

சூடான் அமைதிக்காக நூறு நாள் செபம்


ஆக.14,2010. ஆப்ரிக்க நாடான சூடானில் நிலையான அமைதியும் ஒப்புரவும் ஏற்பட வேண்டும் என்பதற்காக நூறு நாள் செப நடவடிக்கை ஒன்றை ஊக்குவிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.

சூடானின் பல பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் வத்திக்கான் செய்தித்தாளான L'Osservatore Romano வுக்குப் பேட்டியளித்த அந்நாட்டின் ரும்பெக் ஆயர் Caesar Mazzolari, தென் சூடானுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற சனவரியில் நடைபெறக்கூடும் என்று தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 21ம் தேதி முதல், உலக அமைதி தினமான சனவரி முதல் தேதி வரை நூறு நாள்கள் தொடர்ந்து சிறப்பானச் செபம் செய்வதற்கு விசுவாசிகளைத் தூண்டுவதற்கு ஆயர்கள் தீர்மானித்திருப்பதாக அறிவித்தார் ஆயர் Mazzolari.

சூடானின் சமூக மற்றும் அரசியல் நிலைமை நலிவடைந்து இருக்கின்றது என்றும், பல வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் நாடு அமைதியில் வாழ்வது முக்கியம் என்றும் ரும்பெக் ஆயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.