2010-08-12 16:22:12

புனித அல்போன்சா பிறந்த நூறாவது ஆண்டு கொண்டாட்டங்களை இந்திய அரசுத் தலைவர் ஆரம்பித்து வைத்தார்


ஆகஸ்ட் 12, 2010 இந்தியாவில் பிறந்தவர்களில் முதல் புனிதராக உயர்த்தப்பட்ட புனித அல்போன்சா பிறந்த நூறாவது ஆண்டு கொண்டாட்டங்களை இந்திய அரசுத் தலைவர் Pratibha Patil இவ்வியாழனன்று ஆரம்பித்து வைத்தார்.
1910ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி பிறந்த புனித அல்போன்சாவின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இருதயம், சிறுநீரகம், மற்றும் புற்று நோய் ஆகிய நோய்களின் கடுமையைத் தணிக்கும் மையம் ஒன்றின் அடிக்கல்லை நாட்டுவதன் மூலம் இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை அரசுத் தலைவர் ஆரம்பித்து வைத்தார்.இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட கர்தினால் வர்கி விதயத்தில், முதலாவது இந்தியப் புனிதரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் இந்திய அரசுத் தலைவர் கலந்து கொண்டது சிறப்பானதொரு அம்சம் என்றும், அரசுத் தலைவரின் பங்கேற்பு, இந்திய மக்கள் எப்போதும் சமயக் கலாச்சாரத்தில் ஆழ்ந்த பிடிப்புள்ளவர்கள் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் அமைந்துள்ளதென்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.