2010-08-12 16:22:43

இலங்கையில் காணாமல் போயிருக்கும் பத்திரிகை நிருபரை அரசு கண்டுபிடிக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட அமைதிப் போராட்டம்


ஆகஸ்ட் 12, 2010 இலங்கையில் கடந்த 200 நாட்களாகக் காணாமல் போயிருக்கும் பத்திரிகை நிருபரை அரசு கண்டுபிடிக்க வேண்டுமென கிறிஸ்தவர்களும், பிற சமுதாய ஆர்வலர்களும் இப்புதனன்று அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
Prageeth Eknaligoda என்ற பத்திரிக்கை நிருபர் கார்ட்டூன் வரைவதிலும், கருத்துப் பதிவுகள் எழுதுவதிலும் சிறந்தவர் என்றும், கடந்த சனவரி 24ம் தேதி முதல் கடந்த 200 நாட்களாக அவரைக் காணவில்லை என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Prageeth இடது சாரி எண்ணங்கள் கொண்டவர் என்றும், கடந்த அரசுத் தலைவர் தேர்தலின் போது அவர் எதிர்கட்சித் தலைவர் Fonsekaவுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் பேசிவந்தார் என்றும் அவரது மனைவி Sandaya கூறினார்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கத்தோலிக்க குருக்கள், பிற சபை போதகர்கள் அனைவரும் Prageethஐ இலங்கை அரசு கண்டுபிடித்துத் தரவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.