2010-08-10 16:47:36

சிறார் ஏழு வயதுக்கு முன்னரே புதுநன்மை வாங்க அவர்களைத் தயார் செய்யலாம், கர்தினால் பரிந்துரை


ஆகஸ்ட்  10, 2010.      தற்போது சிறார் வெகுவேகமாக பருவம் அடைகின்றனர் மற்றும் பல்வேறு விதமான தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதால் அவர்கள் ஏழு வயதை எட்டுமுன்னரே அவர்களுக்குத் திருநற்கருணை வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்யலாம் என்று திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Canizares Llovera பரிந்துரைத்தார்.

"ஒரு சிறுவன், சிறுமி முதன் முறையாகத் திருநற்கருணையை உட்கொள்வது அவன், அவள் இயேசுவுடன், இயேசுவோடு தொடங்கும் பயணம் போலவும் இயேசுவுடனான நட்புறவைத் தொடங்குவதாகவும் இயேசுவினது முழுமையான வாழ்வில் வளருவதாகவும் இருக்கின்றது" என்று அவர் கூறியுள்ளார்.

திருத்தந்தை பத்தாம் பத்திநாதர், "Quam Singulari Christus Amore" அதாவது "கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு சிறப்புமிக்கது" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு புதுநன்மை வாங்குவதற்கான சிறாரின் வயதை 10 அல்லது 12 ஆகக் குறைத்தார். திருத்தந்தையின் இவ்வாணை வெளியிடப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு L'Osservatore Romano வத்திக்கான் தினத்தாளில் கட்டுரை எழுதிய கர்தினால் Canizares இவ்வாறு கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.