2010-08-09 15:01:30

வீடற்றவர்களது பிரச்சனையை இன்னும் அதிக மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் – ஆஸ்திரேலிய ஆயர்


ஆகஸ்ட் 09, 2010 வீடற்றவர்களது பிரச்சனையை இன்னும் அதிக மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்று ஆஸ்திரேலியாவிலுள்ள கத்தோலிக்க சமூக நீதிக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினரைக் கடந்த வாரம் பலவந்தமாக அப்புறப்படுத்த அரசு பயன்படுத்திய முறைகள் குறித்து கண்டனங்கள் எழுந்துள்ள வேளை, இந்தப் பிரச்சனைக்கு அரசியல் வழிகளில் தீர்வு காண அரசு முயல வேண்டுமென இக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் குறைந்தது 1,05,000 பேர் வீடுகளின்றி இருக்கின்றனர் என்றும், நாடெங்கும் அனுசரிக்கப்படும் வீடற்றோர் வாரத்தில் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் தகுந்த தீர்வு காண்பது இன்றியமையாத ஒரு முயற்சி என்றும் கத்தோலிக்க சமூக நீதிக் குழுவின் தலைவரான ஆயர் கிறிஸ்டோபர் சான்டர்ஸ் கூறினார்.

வீடற்றோரை வலுக்கட்டாயமாக இடம் பெயர்ப்பதைவிட, அவர்களுக்குரிய மரியாதையை வழங்கி, அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதே அவர்களுக்குச் செய்யக்கூடிய சேவை என்று ஆயர் சான்டர்ஸ் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.